24 Tamil News
மாநிலம்

பொங்கல் பண்டிகை 2026 : பள்ளி, கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

N.F.Rifka

admin

பொங்கல் பண்டிகை 2026 : பள்ளி, கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?

ஜனவரி மாதம் என்றாலே பள்ளி, கல்லூரி மாணவர்களுகள் குஷி ஆகிவிடுவார்கள். புதிய வருடத்தின் முதல் மாதமே அதிக விடுமுறை நாட்கள் வருவதுதான் காரணம். தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் ஜனவரி மாதத்தில் வருகிறது. தொடர்ந்து, ஜனவரி 26 குடியரசு தினமும் கொண்டாடப்பட உள்ளது.

ஒவ்வொரு வருடமும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பிடித்த மாதத்தில் ஒன்றாக உள்ள மாதம் ஜனவரி ஆகும். புத்தாண்டு கொண்டாட்டம், பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் என அரசு விடுமுறை நாட்கள் அதிகம் கொண்ட மாதம். குடும்பத்தினருடன், நண்பர்களுடன் கொண்டாடி தீர்க்கும் நாட்கள் ஜனவரியில் இடம்பெறுகிறது. 2026-ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்ற பட்டிலை பார்க்கலாம்.

ஜனவரி மாதம் அரசு விடுமுறை நாட்கள்
ஜனவரி முதல் நாள் புத்தாண்டு விடுமுறை, பொங்கல், குடியரசு தினம் என மொத்தம் 5 அரசு விடுமுறை நாட்கள் உள்ளன.
ஜனவரி 1 - புத்தாண்டு
ஜனவரி 15 - பொங்கல்
ஜனவரி 16 - மாட்டுப் பொங்கல்/ திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - காணும் பொங்கல்/ உழவர் தினம்
ஜனவரி 26 - குடியரசு தினம்
பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவம்
ஜனவரி மாதத்தில் அதிக விடுமுறை கொண்டாடுவது பள்ளி மாணவர்கள் என்றே சொல்லலாம். அனைத்து வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் முடிவடைந்து, ஜனவரி 5-ம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் தொடக்கமே 4 நாட்கள் விடுமுறையில்தான் மாணவர்கள் இருந்தார்கள். தற்போது மூன்றாம் பருவம் தொடங்கி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

பொங்கலுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை
ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டாலும், ஜனவரி 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக வருகிறது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இருப்பினும், மற்றொரு முக்கிய பண்டிகையான போகி ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பலர் இந்த பண்டிகையுடன் பொங்கலை கொண்டாட திட்டமிடுகிறார்கள். அதனால் ஜனவரி 14-ம் தேதியே விடுமுறை எடுத்து, மொத்தமாக 5 நாட்கள் கொண்டாடுவார்கள்.